Thursday, April 25, 2024
No menu items!
Google search engine
Homeசினிமா2023-ன் சாதனை ஓபனிங்: பிரபாஸின் ‘சலார்’ முதல் நாளில் ரூ.178 கோடி வசூல்! | salaar...

2023-ன் சாதனை ஓபனிங்: பிரபாஸின் ‘சலார்’ முதல் நாளில் ரூ.178 கோடி வசூல்! | salaar box office collection day 1 prabhas starrer highest Opening


சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச முதல் நாள் வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ் தவிர்த்து ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று (டிச.22) திரையரங்குகளில் பான் இந்தியா முறையில் வெளியானது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.95 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘சலார்’ பெற்றுள்ளது. ஷாருக்கானின் ‘ஜவான்’ரூ.129 கோடியுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments