Friday, May 24, 2024
No menu items!
Google search engine
Homeகல்விசென்னையில் நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம் | Special camp for education loans

சென்னையில் நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம் | Special camp for education loans


சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நாளை (நவ.18) தமிழக அரசின் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசும், வங்கிகளும் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் நவ.18-ம் தேதி (நாளை) மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கல்விக்கடன் விண்ணப்பம், தேவையான வருமானச் சான்றிதழ், விண்ணப்பம் மற்றும் பான்கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments