Tuesday, April 23, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும்.

ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள். வழக்குகள் இழுபறியாக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரக்கூடும். கலை பொருட்கள் சேரும்.

சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும். பணவரவு உண்டு.

கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும். தாயார் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

துலாம்: வாகனம் பழுதாகி சரியாகும். கலை பொருட்கள் சேரும். பிள்ளைகளுடன் தேவையற்ற வாக்குவாதம் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.

விருச்சிகம்: மகன், மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.

தனுசு: அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரர்களுக்கிடையே மனம் விட்டு பேசி நல்ல முடிவு எடுப்பீர். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். குடும்பத்

துடன் புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கும்பம்: மனக் குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுப்படுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பணவரவு உண்டு.

மீனம்: ஆடை, அணிகலன் சேரும். மகள், மகனின் கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments