Thursday, April 25, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆன்மிகவாதிகளுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

கடகம்: சிந்தனைத் திறன் பெருகும். நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவர்.பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மகன், மகளின் கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும். புதிய நகை வாங்குவீர்கள்.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

கன்னி: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். தியானம் செய்யவும்.

துலாம்: உங்களது நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேற்றுமதத்தவர், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். மனைவிவழி உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். அக்கம் பக்கத்தினரிடம் அளவாகப் பழகவும்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். பணவரவு உண்டு.

மகரம்: அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். புதிய வீடு வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பழைய சொந்த – பந்தங்கள் தேடி வருவார்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments