Wednesday, May 22, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். முகப் பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். கலை பொருட்கள் சேரும்.

கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தாயாரின் உடல்நலனில் அக்கறை தேவை.

சிம்மம்: பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நண்பர்கள், விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

கன்னி: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

துலாம்: குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளால் புகழ், கவுரவம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணருவீர். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். உடன்பிறந்தவர்களுடன் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

மகரம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த – பந்தங்கள் மதிக்கும் அளவுக்கு நடந்து கொள்வீர். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். மகளின் திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு.

கும்பம்: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.

மீனம்: முன்கோபத்தை குறையுங்கள். பண விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments