Tuesday, April 16, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது குறித்து யோசிப்பீர்கள்.

ரிஷபம்: கடந்தகால சுகமான அனுபவங்கள் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம்: விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் நடந்து முடியும். புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு.

கடகம்: விமர்சனங்கள், கேலி பேச்சுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் பொறுமை தேவை.

கன்னி: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

துலாம்: மற்றவரை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். சுற்றி இருப்பவர்களில் உண்மையானவரை கண்டறிவீர்கள். பொருள் சேரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பு செலவு வந்துபோகும். பழைய கடன் பிரச்சினை தீரும்.

தனுசு: துணிச்சலாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் மரியாதை, அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான சேதி வரும்.

மகரம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

கும்பம்: வெளுத்தது எல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் அலைச்சல், செலவு அதிகரிக்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

மீனம்: கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் தேவை.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments