Sunday, April 14, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.16 -...

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.16 – 22 | Vara Rasi Palan for Thulam,Viruchigam, Dhanusu for Nov 16-22 


துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூர், செவ்வாய் – தனவாக்கு ஸ்தானத்தில் புதன் – சுக ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: 17ம் தேதி சூரியன், செவ்வாய் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்கள்.

பலன்கள்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். | பரிகாரம்: கிராம தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – ராசியில் புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் சுக்ரன், கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சூர், செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: 17ம் தேதி சூரியன், செவ்வாய் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்கள்.

பலன்கள்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல்சோர்வு ஏற்படும். வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைபளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.

கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம்

தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். | பரிகாரம்: முருகனை வணங்கி வர பிரச்சினைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் குரு(வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன், கேது – லாப ஸ்தானத்தில் சூர், செவ்வாய் – விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலைகள் உள்ளது. | கிரக மாற்றங்கள்: 17ம் தேதி சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்கள்.

பலன்கள்: உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். | பரிகாரம்: குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments