Tuesday, April 23, 2024
No menu items!
Google search engine
Homeஜோதிடம்இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope


மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பீர்கள்.

ரிஷபம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

சிம்மம்: பணவரவு உண்டு. அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள்.

கன்னி: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து உறவினர்கள் சிலர் உதவி கேட்பார்கள். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும்.

விருச்சிகம்: உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். அடுத்தவர்கள் மனது காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வீண்பழி வந்து சேரும்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வீடு, வாகன யோகம் உண்டு.

கும்பம்: குழப்பங்கள் இன்றி தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். சிலருக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்.

மீனம்: மனக் குழப்பம் விலகும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்ப்பது அவசியம்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments